பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்!

  • பிரபல நடிகரான விஜய் தேவர கொண்டா படத்திற்கு பிரபல நடிகையின் மகனான ஜான்வி கபூர் தேர்வாகியுள்ளார்.
  • இதனால் மற்ற டோலிவுட் நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமா உலகில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி ஆவார்.இவரது மறைவிற்கு பிறகு இவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவின் மீது ஆர்வம் காட்டி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகரில் ஒருவர் விஜய் தேவர கொண்டா ஆவார்.இவர் தற்போது வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை தொடர்ந்து பைட்டர் படத்தில் நடிக்கவுள்ளார்.

பூரி ஜெகன் நாத் இயக்கவுள்ள இந்த படத்தில் அவர் தமக்கு பாலிவுட் நடிகை தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.ஆனால் அவரிடம் நடிக்க சில முன்னணி நடிகைகள் மறுத்துவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தமது படத்திற்கு நடிகை தேடும் பொறுப்பை பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகரிடம் ஒப்படைத்துள்ளார்.இதன் அடிப்படையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் தேர்வாகியுள்ளார்.

இதனால் மற்ற டோலிவுட் நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.