கமலஹாசனின் காலில் விழுந்த தர்சன்! எதற்காக தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக

By Fahad | Published: Apr 08 2020 08:48 AM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் நான்கு பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில், முகன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த தர்சன், கடின உழைப்புடன் விளையாடினார். இந்நிலையில், இறுதி கட்டத்தில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவருக்கு இந்தியன்-2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியில், தர்சனுக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பை கொடுத்து, அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார் கமலஹாசன். இதனையடுத்து, தர்சன் கமலஹாசனின் காலில் விழுந்து ஆசீர் பெறுகிறார்.

Related Posts