தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் திரைவிருந்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. ரஜினிகாந்தும் அண்மையில் ஷூட்டிங் முடிந்து சென்னைக்கு உற்சாகமாக திரும்பினார். படம் நன்றாக வந்துள்ளதாக பேட்டியும் கொடுத்தார். தற்போது வந்த தகவலின் படி, தீபாவளிக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, தர்பார் படத்தின் டீசரை வெளியிடலாம் என அதற்க்கான வேலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் களமிறங்கியுள்ளாராம். விரைவில் இதற்கான அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.