தர்பார் ரஜினியுடன் ஜோடியாக போஸ் கொடுத்திருக்கும் லதா ரஜினிகாந்த்! வைரல் புகைப்படம் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் கதைக்களம் மும்பையில் நடைபெறுவது போல் இருப்பதால், தற்போது படக்குழு மும்பையில் தீவிரமாக இப்படத்தை படமாக்கி வருகிறது.  நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வரும் வேளையில், ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் இருக்கும் போது ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.