சூப்பர் ஸ்டாருடன் மோத தயாரான சூர்யா! சூரரை போற்று புதிய அப்டேட்!

இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார்.
இப்படத்தை முதலில் டிசம்பர் கிருஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் , படம் முடிய தாமதம் ஆவதால்  தற்போது இப்படம் ஜனவரி பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
2020 பொங்கல் தினத்தை முன்னிட்டு தான் சூப்பர் ஸ்டார் நடித்து,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.