அடடா என்ன ஒரு அழகு! நான் உன்னோட அம்மாவா இருக்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்!

  • நடிகை எமி ஜாக்சனின் குழந்தை. 
  • நான் உன்னோட அம்மாவா இருக்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்.

நடிகை எமிஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தாண்டவம், தெறி, தங்க மகன், ஐ மற்றும் 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னமே கர்ப்பமான எமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக ஆன் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது 4 மாதங்களை கடந்துள்ள தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா வெளியிட்டு, நான் உன்னுடைய அம்மாவாக இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.