அட மறுபடியும் மோதலா? மீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி!

  • மீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி.
  • தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படமும், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் திரைப்படமும் வரும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாக உள்ளது. 

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், சில பிரபலங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது வழக்கம். இதனால், இந்த பிரபலங்களின் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த தீபாவளியை முன்னிட்டு, தளபதி விஜயின் பிகில் திரைப்படமும், நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது.

இவ்வாறு வெளியாகி கார்த்தி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் போட்டிகளும் நிலவியது. இதனையடுத்து, தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படமும், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் திரைப்படமும் வரும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.