அப்பா இறந்த ஒரு மாதத்தில் பயிற்சியாளரும் இறந்துவிட்டார்-கோமதி மாரிமுத்து உருக்கம்!

கடந்த ஏப்ரல்  மாதம் தோஹாவில் நடைபெற்ற தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்ந்து தந்தார்.

Image result for கோமதி மாரிமுத்து

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோமதி மாரிமுத்து ,2012-ம் ஆண்டு தான் ஒலிம்பிக் என்றால் என்னனு தெரியும். 2010-ம் ஆண்டு நான் ஒரு நல்ல வேலைக்கு தான் போகணும் முடிவு செய்தேன்.என் அப்பா 2016-ல் இறந்துட்டாரு இவர் இறந்த அடுத்த ஒரு மாதத்தில் என்னோட பயிற்சியாளரும் இறந்துட்டாரு , அப்புறம் நான் என்ன பண்றது தெரியாம இருந்தேன்.அப்போ தன் என் உறவினர் அக்கா உன்னால முடியும் நீ நம்பிக்கையோட பயிற்சி செய்னு சொன்னாங்க

அதை தொடர்ந்து பின்னர் ஒரு புதிய பயிற்சியளரிடம் பயிற்சி பெற்றேன்.என்னால் முடியும் என நினைத்து கொண்டு கடுமையாக ஓடினேன்.அதனால் எனது இலக்கை அடைந்தேன். அதேபோல நீங்களும் உங்கள் இலக்கை நோக்கி பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றியடைய முடியும்.உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என கூறினார்.

author avatar
murugan