சிவகார்த்திகேயனுடன் சீறிப்பாய தயாரான முரட்டு சல்மான்கான்! தபாங்-3 தமிழ் அப்டேட்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும்

By Fahad | Published: Apr 01 2020 12:58 AM

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தபாங் 1 & 2. இதில் முதல் பாகமான தபாங் படம் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் வெளியானது. தற்போது தாபங் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை தமிழ் இயக்குனர் பிரபுதேவா இயக்கியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. முதன் முதலாக சல்மான் கான் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆவது இதுதான் முதல் முறை என கூறி வருகின்றனர். இந்த தமிழ் பாதிப்பை கே.ஜே.ஆர் பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே நாளில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ' இரும்புத்திரை' இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More News From TAMIIL CINEMA NEWS