மத்திய வங்க கடல் பகுதியில் வரும் 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!

மத்திய வங்க கடல் பகுதியில் வரும் 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் குறைத்த காற்றழுத்த தாழ்வு பகுதி. இது 15ஆம் தேதி மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மத்திய வங்க கடல் பகுதியில் மையம் கொள்ளும். அதன்பின் மேலும் வலுப்பெற்று, வரும் 16 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக, தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். இந்த சூறாவளிக் காற்று, வரும் 15 அம தேதி மணிக்கு 45-55 கி.மீ வேகதிலும், அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். மேலும், வரும் 16 ஆம் தேதி மணிக்கு 55-65 கி.மீ வேகதிலும், அவ்வப்போது 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுமென வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.