ஊரடங்கால் தள்ளிப்போன திருமணம்.! 80கிமீ தூரம் நடந்தே மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண்.!

உத்திர பிரதேசத்தில், தங்களது திருமணம் தடைப்பட்டதால், மனமுடைந்த மணப்பெண் தன் வீட்டில் இருந்து 80 கிமீ தூரம் இருக்கும் மணமகன் வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த கோல்டி என்கிற பெண்ணிற்கும், கன்னாஜ் பகுதியை சேர்ந்த வீரேந்திர குமார் என்பவருக்கும் கடந்த மே 4ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

ஆனால், ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. மேலும், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு திருமண தேதி முடிவு செய்யலாம் என இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர். 

இதனால் மனமுடைந்த மணப்பெண் கோல்டி, தன் வீட்டில் இருந்து 80 கிமீ தூரம் இருக்கும் மணமகன் வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெரியோர்கள் மணபெண்னை  சமாதானபடுத்த முயற்சித்தனர். ஆனால் மணப்பெண் சமாதானம் ஆகவில்லை. 

இதனால், நாளை இவர்களது திருமணத்தை நடத்த பெரியோர்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.