ஊரடங்கு நீட்டிப்பு.? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது.!

ஊரடங்கு நீட்டிப்பு.? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது.!

மே 25-ல் மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் ஆலோசித்த நிலையில், தற்போது ஆட்சியர்களிடம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாளை மறுநாள் 4-வது பொதுமுடக்கம் முடியும் நிலையில் 5-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முதல்வர் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 25-ல் மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் ஆலோசித்த நிலையில், தற்போது ஆட்சியர்களிடம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில், ஜூன் 1ம் தேதி முதல் பேருந்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.  தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கில் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை மறுதினத்துடன் 31ம் தேதி 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube