மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பஞ்சாப் அரசு அறிவிப்பு.!

நாடு முழுவதும் வரும் 14ம் தேதி ஊரடங்கு நிறைவடையும் நிலையில், பஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலத்தில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மே 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. 

இதனிடையே நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்