நாடு முழுவதும் ஊரடங்கு ! பெட்ரோல், டீசல், கியாஸ் இருப்பு உள்ளது- இந்திய எண்ணெய் கழக தலைவர் அறிவிப்பு

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து.

By venu | Published: Mar 30, 2020 05:06 PM

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை, உணவகங்கள் (பார்சல் மட்டும் ) ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய எண்ணெய் கழக தலைவர் சஞ்சீவ் சிங் கூறுகையில்,பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவை தேவையான அளவுக்கு இருப்பு வைத்துள்ளோம். எனவே ஊரடங்கு காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.
பெட்ரோல் பங்க்குகள், கியாஸ் விநியோகம்  அனைத்தும் வழக்கம்போல இயங்கி வருகின்றது . கூடுதலாக தேவைப்பட்டாலும், உற்பத்தி செய்வதற்கு சுத்திகரிப்பு ஆலைகளும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc