தனுஷின் 'ரகிட ரகிட' பாடலுக்கு நடனமாடி கெத்து காட்டிய சிஎஸ்கே வீரர்கள்.!

தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு சிஎஸ்கே வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக

By ragi | Published: Aug 01, 2020 02:12 PM

தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு சிஎஸ்கே வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக மார்ச் - ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தடை செய்யப்பட்டது. அதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதற்காக தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், தற்போது தனுஷ் பாடலுக்கு நடனமாடியது போன்ற வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்திலுள்ள ரகிட ரகிட என்ற பாடல் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை வைத்து ரகிட ரகிட பாடல் பின்னணியில் மாஸ்ஸான வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 
Step2: Place in ads Display sections

unicc