சென்னையில் இருந்து அமீரகத்திற்கு பறக்கும் CSK அணி..!

ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்

By bala | Published: Aug 01, 2020 05:53 PM

ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் அமீரகத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 29-ம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் அனுமதி கோரியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வருகின்ற செம்படம்பர் மாதம் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை செய்துள்ளோம் என்று சமீபத்தில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.மேலும் நவம்பர் 8-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீட்டிலே பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள் அதனால் வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள்.

அதன் பிறகு அடுத்த நாள் ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் அமீரகத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்தாலும் இந்த பயணம் தொடர்பான தேதிகள் அனைத்தும் மத்திய அரசின் அனுமதிக்காக சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அமீரகம் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததும் இது தொடர்பான அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc