சரியாக விளையாடவில்லை, பறிபோனது கேப்டன் கோலியின் முதலிடம்.!

சரியாக விளையாடவில்லை, பறிபோனது கேப்டன் கோலியின் முதலிடம்.!

  • டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் விராட் கோலி தனது முதலிடத்தை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை கைப்பற்றியுள்ளாா்.

டெஸ்ட் தரவரிசையில் நம்பா் ஒன் பேட்ஸ்மேனாக பல மாதங்களாக கோலி நீடித்து இருந்தார். இந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் விராட் கோலி தனது முதலிடத்தை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அதிரடி வீரா் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் 911 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியுள்ளாா். இவரை தொடர்ந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் தற்போது 3வது இடத்தில் இருக்கிறார்.

இதனிடையே நியூஸிலாந்துடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் கோலி வெறும் 21 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் 906 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டாா். பின்னர் துணை கேப்டன் ரஹானே, சேதேஸ்வா் புஜாரா, மயங்க் அகா்வால் ஆகியோா் முறையே 8, 9, 10வது இடங்களில் உள்ளனா் என்பது குறிப்பிடப்படுகிறது.

 

Join our channel google news Youtube