ராணுவ வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி.. எவ்வளவு தெரியுமா?

  • ராணுவத்திற்கும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் நன்கொடைகள் பல பக்கங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளன.
  • முதல் போட்டியில் வரும் டிக்கெட் விற்பனை தொகையை முழுவதும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளது.

பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாத குழு ஜெய்ஷ் இ முகமது இருக்கிறது. அப்பொழுது தாமாக முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்டது.

இதற்கு ஒட்டுமொத்த நாடு கண்டனம் தெரிவித்தது.இது ஒருபுறமிருக்க, ராணுவத்திற்கும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் நன்கொடைகள் பல பக்கங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளன.

பூஜை செய்யும் உருவாகும் ஐபிஎல் தொடரின் துவக்கவிழா நிறுத்திவிட்டு அதற்கான தொகையை ராணுவ வைப்பு நிதிக்காக வழங்கியது. இதற்கான தொகையை துவக்க போட்டியின்போது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முதல் போட்டியில் வரும் டிக்கெட் விற்பனை தொகையை முழுவதும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளது.

author avatar
Vignesh

Leave a Comment