ரஜினியை கேலி செய்த கிரிக்கெட் வீரர்!!!!!

ரஜினியை கேலி செய்த கிரிக்கெட் வீரர்!!!!!

ரஜினிகாந்த் மிகுந்த ரசிகர்கள் பட்டாளத்தை உடையவர். அவர், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண், விருதைப்பெற்றுள்ளார். நடிப்பு தவிர, ரஜினிகாந்த் திரைக்கதை ஆசிரியராகவும், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகராகவும் பணியாற்றியுள்ளார்.

அவரது தாய்மொழி மராத்தி என்றாலும், அவர் இன்னும் எந்த மராத்தி படங்களிலும் நடிக்கவில்லை. ரஜினிகாந்த் மொத்தம் 190 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் பெங்காலி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் அந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.  மேலும் அவர் கட்சி ஆரம்பிப்பதாக கூறி ஒரு வருடம் ஆகிறது. ஆனால் அவர் இன்னும் அரசியலுக்கு வரவில்லை.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனிடம் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி வருவேன், வருவேன் என்று சொல்லி கொண்டே இருக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் நான் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். முரளிதரனின் இந்த பதில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *