100 ஊழியர்களை பரிசோதித்ததில் 7 பேருக்கு கொரோனா.! தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல்.!

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனையை

By manikandan | Published: Jun 23, 2020 09:11 AM

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனையை நடத்தியது. அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை உலகம் முழுக்க சுமார் 95 லட்சதிற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.71 லட்சதிற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சில் தங்களது ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த விளையாட்டு வீரர்கள் என 100 பேருக்கு கொரோனா பரிசோதனையை நடத்தியது. அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் இதுவரை 97,302 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 1930 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தற்போது அந்நாட்டில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

Step2: Place in ads Display sections

unicc