#ENGvsWI: 117 நாட்களுக்கு பின் நடக்கவுள்ள கிரிக்கெட் தொடர்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

114 நாட்களுக்கு பிறகு நடைபெறவுள்ள முதல் கிரிக்கெட் போட்டியான இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் இடையான முதல் டெஸ்ட் போட்டி, இன்று இங்கிலாந்தில் தொடங்குகிறது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன்காரணமாக மார்ச் மாதம் முதல் நடக்கவுள்ள அனைத்து விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது.

சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் காரணத்தினால், கடந்த ஜூன் மாதம் முதல் விளையாட்டு போட்டிகள், ரசிகர்களின்றி நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை எந்தொரு கிரிக்கெட் தொடரும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்தில் இதுவரை 1.61 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் அங்கு கொரோனா பரவும் சூழலிலும், கிரிக்கெட் போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது. இது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பதை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவித்தது. அந்த தொடரின் முதல் போட்டி, இன்று முதல் தொடங்குகிறது. 117 நாட்களுக்கு பிறகு நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடரில், கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.

ஆயினும், பந்து மீது எச்சிலை தேய்க்ககூடாது, பந்தை தொட்ட பிறகு கிருமி நாசினி வைத்து கைகளை சுத்தம் செய்வது, போன்ற கட்டுப்பாடுகளை வித்திட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டை மீறி பந்தில் எச்சிலை தேய்த்தால் ஒரு இன்னிங்ஸுக்கு 2 முறை எச்சரிக்கை விடுக்கப்படும். அதையும் மீறினால், எதிரணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக விதிக்கப்படும்.

போட்டியின் போது வீரர்கள் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவருக்கு தகுந்த மாற்று வீரரை மாற்றி கொள்வது, போன்ற விதிமுறைகளை விதிக்கப்பட்ட நிலையில், அது இந்த போட்டி முதல் அமலில் வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியானது, இங்கிலாந்து, சவுதம்டனில் உள்ள ரோஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கு உலகளவில் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.