பாகிஸ்தான் வீரர்களின் மனைவி மற்றும் குடுப்பதினாருக்கு கிரிக்கெட் வாரியம் திடீர் தடை

Cricket Board abrupt ban on wife of Pakistani players

உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. அதற்கான Warm-up போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று Warm-up முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ,ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகிறது . இரண்டாவது  போட்டியில் இலங்கை அணியும் , சவுத்ஆப்பிரிக்கா அணியும் மோதி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணி இருதரப்பு தொடரில் பங்கேற்றது. அந்த தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு  தடையை விதித்து உள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க  வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் போது  வீரர்களின் கவனம் சிதறாமல் இருப்பதற்காகவே இந்த தடையை விதித்து உள்ளது. அப்படியே தங்களுடன் தங்க வைக்க வேண்டும் என்றால் மனைவி மற்றும் குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் தங்க வைத்து கொள்ளலாம் அதற்குரிய செலவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  பொறுப்பேற்காது என தெரிவித்துள்ளனர். இதற்கு முன் நடந்த இருதரப்பு போட்டி நடக்கும் போது பாகிஸ்தான் வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் மனைவி தங்க அனுமதிக்கப்பட்டது.ஆனால் தற்போது மறுக்கப்பட்டு உள்ளது.