CPL: பிலிப்ஸ்அதிரடி வீணானது..! பிராத்வைட் அணி வெற்றி..!

வெஸ்ட் இண்டீஸில் தற்போது சிபிஎல் டி 20 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இன்று அதிகாலை நடந்த போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும்  செயின்ட் கிட்ஸ் விளையாடியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் முடிவு செய்தது.முதலில் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை பறிகொடுத்து 176 ரங்கள் அடித்தனர். அதில் ஃபேபியன் ஆலன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என 62 ரன்கள் எடுத்தார்.

பின்னர் இறங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் தொடக்க வீரரான க்ளென் பிலிப்ஸ் 49 பந்தில் 87 குவித்தார்.ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஜமைக்கா அணி பின்னர் விக்கெட்டை வரிசையாக கொடுத்தனர்.இதனால் அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 156 ரங்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

செயின்ட் கிட்ஸ் அணி சார்பில் ஷெல்டன் கோட்ரெல் , அல்சாரி ஜோசப், ராயத்  ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

author avatar
murugan