ஆசிரியர் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உத்தரவு...!!

ஜாக்டோ_ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப

By Dinasuvadu desk | Published: Jan 23, 2019 06:55 PM

ஜாக்டோ_ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் நீதிமன்றம் உத்தரவு 
  • 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: 
  • இன்று (ஜனவரி  22-ஆம்  தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்
  • கைது 
  • நீதிமன்றம் உத்தரவு.
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்:  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக  அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இன்று (ஜனவரி  22-ஆம்  தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்: Image result for ஜாக்டோ ஜியோ எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று (ஜனவரி  22-ஆம்  தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு  செய்தது. கைது :  நேற்று முதல் இன்றும்  ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து இன்று பல்வேறு பகுதியில் அரசு ஊழியர்கள் சாலை மறியல் , இரயில் மறியல் என போராட்டம் தொடர்ந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை ,  மன்னார்குடி , சேலம் , திருவாரூர், திருச்சி , காட்பாடி , வாணியம்பாடி , திருவண்ணாமலை வந்தவாசி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்களை காவல்துறையினர்கைது செய்து வருகின்றனர்.அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித்த வேண்டுமென தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நீதிமன்றம் உத்தரவு. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் சென்னை அருகம்பாக்கம் கோகுல் என்ற மாணவர்கள் மனு தாக்கல் செய்தார்.அதில் தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அதில் கூறப்படு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யா நாராயணன் , ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.அப்போது நீதிபதிகள் தேர்வு நடைபெற இருக்கிறது மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு.
Step2: Place in ads Display sections

unicc