உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!

முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வடகிழக்கு டெல்லி வன்முறையில் பங்கு வகித்ததாகக் கைது கைது செய்யப்பட்ட ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித் குடும்பத்தை சந்திக்க கோரிய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

காலித் தற்போது பத்து நாள் போலீஸ் ரிமாண்டில் உள்ளார். அவரது ரிமாண்ட் காலம் செப்டம்பர் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ரிமாண்ட் காலத்தில் காலித் குடும்பத்தை சந்திக்க விரும்புகிறார் என்று காலித்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ரிமாண்டின் போது குடும்பத்தை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கர்கர்டூமாவைச் சேர்ந்த கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத்  தெரிவித்துள்ளார். செப்டம்பர் 13 ம் தேதி உமர் காலித் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள், நீதிமன்றம் 10 நாள் ரிமாண்டில் காலித்தை போலீசாரிடம் ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan