மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு -வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். மேயர்

By venu | Published: Dec 03, 2019 02:29 PM

மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.இதேபோல் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  யேசுமணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.அதில் மறைமுகத்தேர்தல் ஊழலுக்கு வழிவகுக்காது என்றும் இதற்கு முன்பும் மறைமுகத் தேர்தல் மூலமாக தலைவர்கள் தேர்தெடுக்கப்பட்டார்கள் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இறுதியாக சட்டபூர்வமான காரணங்களுடன் கூடுதல் மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .பின் வழக்கின் விசாரணையை டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம் .
Step2: Place in ads Display sections

unicc