இன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை !

இன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் 

By venu | Published: Oct 24, 2019 06:45 AM

இன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில்  வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில்  மொத்தம் 22 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றது.வாக்கு எண்ணிக்கையை நேரடியாக தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இன்று  வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றது. 32 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்படுகின்றது.
Step2: Place in ads Display sections

unicc