அடடே நம்ப முடியவில்லையே….!! பாப்கார்ன் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா….?

  • பாப்கானில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள்.
  • பாப்கார்னால் குணமாகும் நோய்கள்.

பாப்கார்ன் நாம் அனைவரும் அறிந்த ஒரு உணவு பொருள். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிகமாக நாம் வெளியிடங்களுக்கு சென்றாலே குழந்தை உண்பதற்க்கென்று விரும்பி கேட்கும் உணவு பொருள் பாப்கார்ன் தான்.

Related image

பாப்கார்ன் என்பது சோளப்பொறியை தான் குறிக்கும். சோளத்தினால் உருவாகும் உணவு போல் தான் இந்த பாப்கார்ன். அதிகமானோர் பாப்கார்ன் சாப்பிடுவது உடலுக்கு கேடு என சொல்வதை நாம் கேட்டிருப்போம்.

ஆனால் இந்த பாப்கார்னால் நமது உடலில் ஏற்படும் பல நோய்கள் தடுக்கப்படுவது, பல நோய்களில் இருந்தும் விடுதலை பெற முடியுமாம். தற்போது இந்த பதிவில் பாப்கார்னில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

பாப்கார்னில் உள்ள சத்துக்கள்

Image result for பாப்கார்னில் உள்ள சத்துக்கள்

நாம் இது உடலுக்கு நல்லதல்ல என ஒதுக்கும் உணவு பொருளான பாப்கார்னில், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், மாங்கனீசு, நார்சத்து, பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது.

குடல் இயக்கம்

பாப்கார்னை நாம் சாப்பிடும் போது குடல் இயக்கம் சீராக இயங்க உதவுகிறது. பாப்கார்னின் தவிட்டு நார்சத்து அதிகமாக இருப்பதால், குடலின் இயக்கம் சீராகவும், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது.

Image result for குடல் இயக்கம்

மேலும், மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

கொலஸ்ட்ரால்

பாப்கார்னில் உடலில் உள்ள கேட்ட கொழுப்புக்களை கரைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. ஒரு முழு தானியமான பாப்கார்ன் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், இரத்த குழாய்களிலும், தமனிகளில் படித்திருக்கும் அதிக அளவிலான கொழுப்புக்களை வெளியேற்றுகிறது.

Image result for கொலஸ்ட்ரால்

மேலும் இது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

புற்றுநோய்

Image result for புற்றுநோய்

பாப்கார்னை நாம் தொடர்ந்தது சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்கள் உண்டாக்கும் அடிப்படை கூறுகளை எதிர்த்து கூடிய ஆற்றல் உள்ளது. ஏனென்றால், இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டின் முக்கிய பணியே இது தான்.

உடல் எடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பாப்கார்ன் ஒரு சிறந்த உணவாகும். ஏனென்றால் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

Image result for உடல் எடை

இந்த சத்து வயிற்றை நிரப்புவதோடு, பசியை தூண்டும் ஹார்மோனை சுரக்காமல் தடுக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை அதிகமாக சாப்பிடலாம். .

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment