தலைநகரில் தலை தூக்கும் கொரோனா… திக்குமுக்காடும் திருவிக நகர்… புள்ளி விவரத்தை வெளியிட்ட சென்னை மாநகராட்சி…

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தியும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் மட்டும்  நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.அதில், 

15 மண்டலங்களில் அதிகபட்சமாக திரு.வி.க.நகரில் 412 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 375 பேருக்கும்,
  • கோடம்பாக்கத்தில் 387 பேருக்கும்,
  • அண்ணாநகரில் 191 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
  • தண்டையார்பேட்டையில் 168 பேரும்,
  • தேனாம்பேட்டையில் 285 பேரும்,
  • திருவொற்றியூரில் 40 பேரும்,
  • வளசரவாக்கத்தில் 176 பேருக்கும்,
  • பெருங்குடியில் 20 பேருக்கும்,
  • அடையாறில் 91 பேருக்கும்,
  • அம்பத்தூரில் 105 பேருக்கும் 
  • ஆலந்தூரில் 14 பேருக்கும்,
  • மாதவரத்தில் 30 பேருக்கும்,
  • சோழிங்கநல்லூரில் 15 பேருக்கும்,
  • மணலியில் 13 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 
author avatar
Kaliraj