ஆந்திராவில் பெண்கள் ஆவேசம்… மதுக்கடைக்கு 7மணி நேரம்… காய்கறி கடைக்கு 3 நேரம்… என்னாங்க இது ஞாயம்…. போராட்டத்தில் குதித்த பெண்கள்…

ஆந்திராவில் பெண்கள் ஆவேசம்… மதுக்கடைக்கு 7மணி நேரம்… காய்கறி கடைக்கு 3 நேரம்… என்னாங்க இது ஞாயம்…. போராட்டத்தில் குதித்த பெண்கள்…

இந்தியாவில் பரவி வரும் உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், அத்தியவசிய பொருள்களான காய்கறி சந்தைகள் நீண்ட நேரம் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மக்கள் சமுக விலகலை கடைபிடிக்காமல்  பொது இடங்களில் உலா வந்தனர். இதனால் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள் 3 மணி நேரம் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றில் இருந்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த மதுக்கடைகளை  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அதிக இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் மதுப்பிரியர்கள் கூட்டமாக கடைகளின் முன் குவிந்தனர். இதேபோல் அப்பகுதியில் பெண்களும்  திடீரென வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது ‘‘அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் காய்கறி சந்தைகள் 3 மணி நேரம் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயிரை குடிக்கும் மதுக்கடைகளுக்கு மட்டும் ஏழு மணி அனுமதி எப்படி வழங்கலாம்’’ எனத் தங்கள் தரப்பு ஞாயத்தை எடுத்துரைத்தனர்.
author avatar
Kaliraj
Join our channel google news Youtube