சினத்தின் உச்சத்தில் அமெரிக்க அதிபர்… உலக சுகாதார நிறுவனத்தை சாடிய அதிபர்…

கொரோனா வைரஸ் தொற்றின்  தாக்கம் குறித்து செய்தியாளர்களிடமும் சமுக வலைதளங்களிலும்  தினந்தோறும் பேசி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில், உலக சுகாதார அமைப்பின் மீது இருக்கும் கோபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளர். அவரது கோவம், சீனாவை மையமாகக் கொண்டவையோ என்று அனைவரையும் சிந்திக்க தோன்றுகிறது என்றும்,  கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பதிலளிப்பதில் ஒரு பயனும் இல்லை என்று கோபமாக கூறினார்.மேலும், அவர் உலகசுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெறுகிறது. உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா   பெரும்பகுதி பணத்தின் செலுத்துகிறது. ஆனால் இந்நிறுவனம் அந்த சீனாவை மையமாக கொண்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.என்று குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் அவர்கள் அறிந்திருக்க வேண்டும், நிறைய தகவல்கள் அவர்களிடம் இருந்தன. இந்நிறுவனம் இதுகுறித்து அறிந்திருக்கலாம், ஆனால் இதன் காரணமாக, இனி உலக சுகாதர அமைப்பிற்கு செலவழித்த பணத்தை நாங்கள் பிடிக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார். இதனால் உலகசுகாதார அமைப்பிற்கு மிகப் பெரிய நன்கொடையாளரின் பங்களிப்பு நிறுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது
author avatar
Kaliraj