கொடிய கொரோனாவை ஒழிக்க 5 அம்ச திட்டம் ரெடி… அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்….

கொடிய கொரோனாவை ஒழிக்க 5 அம்ச திட்டம் ரெடி… அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்….

இந்தியாவில் கொடிய கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பாடில்லை. தற்போது தலைநகர் டெல்லியில் மட்டும் இந்த கொரோனா வைரசால் மட்டும் 520க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் அரவிந்கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக 5T PLAN எனப்படும் ஐந்து அம்ச திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

  1. அவை Testing
  2. Tracing
  3. Treatment
  4. Teamwork
  5. Tracking & Monitoring
     இதன்படி டெல்லியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது முதல் அம்சம்.அடுத்து இந்த வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்படுவர். மூன்றாவதாக கொரோனா பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். நான்காவதாக துறைசார்ந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து கூட்டு முயற்சியாக செயல்படுவது என்றும்; கடைசியாக கொரோனா பாதித்த மற்றும் அறிகுறிகளுடன் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணித்து நோயை முற்றிலும் தடுப்பதாகும்.இந்த வைரஸ் தொற்றை எந்த அளவிற்கு பரிசோதனை செய்கிறோமோ அந்த அளவிற்கு நோயை கட்டுப்படுத்துவது எளிமையாகி விடும் என்பதால் இனி முழு கவனமும் தனிநபர் பரிசோதனையில் செலுத்தப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
author avatar
Kaliraj
Join our channel google news Youtube