கொரோனோ பாதிப்பு... வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை 24 மணிநேரமும் கண்காணிக்கும் சீர்மிகு காவல்துறையினர்...

கோரோனா வைரஸ் தொற்று  பரவாமல் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் 

By Fahad | Published: Apr 02 2020 12:24 PM

கோரோனா வைரஸ் தொற்று  பரவாமல் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்  தங்கியுள்ள 283வீடுகளில் 24 மணி நேரமும் சீர்மிகு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், கோரோனா வைரஸ் பாதித்தநபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகிய்ய நபர்கள்  கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைகளிலும், அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். வீடுகளில் தங்கியுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறவினர்கள் மற்றும்  அக்கம்பக்கத்தினர் உட்பட யாரிடமும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்றவர்களின் வீடுகளை பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட வீடுகளில் எச்சரிக்கை சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது.

 

More News From கண்காணிப்பு