ஊர் திரும்பிய தொழிலாளிகள் மீது பூச்சி மருந்தை நேரடியாக பீச்சி அடிக்கும் -உ.பி. அரசு

வெளியூரில் இருந்து திரும்பிய தொழிலாளிகள் மீது உ.பி. அரசு நேரடியாக பூச்சி  மருந்தை அடிப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் மிக வேகம் இந்தியாவில் பரவி வருகிறது இதுவரை வைரஸ்க்கு 1027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29பேர் உயிரிழந்துள்ளனர்.கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தலைநகர் டெல்லியில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்த லட்சக்கணக்கான உ.பி மக்கள் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் திணறிய நிலையில் உ.பி முதல்வர் யோகி 1000 பேருந்துகளை இயக்க உத்தரவிட்டார் .இதனால் டெல்லியில் லட்சக்கணக்கான உ.பி மக்கள் ஒன்றுக்கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையி வெளியூரில் இருந்து உ.பி திரும்பிய தொழிலாளிகள் மீது அம்மாநில அரசு நேரடியாக பூச்சி மருந்தினை அடித்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பரேலியில் தொழிலாளர்கள் மீது நேரடியாக கிருமி நாசினி அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha