2வது முறை சோதனை! ரிசல்ட் குறித்து ட்ரம்ப் கூறியது?

கொரோனா பாதிப்பு சோதனையை 2 வது முறையாக அதிபர் ட்ரம்ப் செய்து கொண்டார் இது குறித்து வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

அதில் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளாவது: கொரோனா பாதிப்பு சோதனையை அதிபர் ட்ரம்ப் நடத்தப்பட்டதாகவும் சோதனை முடிவில் ட்ரம்ப்க்கு  நோய் பரவல் இல்லை;மேலும் எந்த வித நோய் கூறுகளும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இது குறித்து ட்ரம்ப் கூறுகையில்  ஒரு நிமிடத்தில் சோதனை முடிந்து விட்டது;15 நிமிடத்தில் முடிவு அறிக்கை வந்துவிட்டதாகவும் ஆனால் அதற்காக காத்திருக்காமல் தாம் பணிகளை  கவனிக்க சென்றுவிட்டதாக கூறிய அவர் இந்த புதிய பரிசோதனை உத்தி எப்படி செய்யப்படுகின்றன.அது எவ்வளவு விரைவாக அறிக்கை அளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே  2வது முறையாக பரிசோதனை மேற்கொண்டதாக தெரிவித்தார். 

 

author avatar
kavitha