கொரோனா வைரஸ் அழியாமல் கூட போகலாம் – WHO எச்சரிக்கை!

கொரோனா அழிக்கப்படாமலும் போகலாம், அனால் கட்டுப்படுத்தப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக்கான இயக்குனர் மைக் ரயான் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை 4,429,235 பேர் உலகம் முழுவதும் பாதிக்க பட்டுள்ளதோடு, 298,165 பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வழிமுறைகளை மத்திய அரசும் மாநில அரசும் உலக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக்கான இயக்குனர் மைக் ரயான் பேசும்பொழுது, கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்த எதிர்மறையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறும் பொழுது, ஒருவேளை இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான தடுப்பு ஊசி கண்டறியப்பட்டாலும் அதன் வீரியத்தையும் பரவும் வேகத்தையும் கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகள் தேவைப்படும். தற்போது உள்ள நிலவரப்படி 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.

நம்முடைய சமூகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பெயர்களுடன் பரவி வரக் கூடிய வைரஸ்களில் ஒன்று ஆக இந்த வைரசும் மாறலாம். இது முற்றிலும் அழியக்கூடிய நிலை ஏற்படாமல் போகலாம் என காணொளி வாயிலாக பேசியுள்ளார்.

மேலும் எச்ஐவி போன்ற வைரஸ்கள் இன்னும் அழிக்கப்படவில்லை ஆனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல இந்த வைரஸை அழிக்க முடியாமல் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு நிலையை அடையலாம் எனக் கூறியுள்ளார். அத்துடன் கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிப்பது தன்னால் நம்ப முடியாத ஒன்று என்றும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal