இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ்..? தனி வார்டில் வைத்து கண்காணிப்பு .!

இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ்..? தனி வார்டில் வைத்து கண்காணிப்பு .!

  • சீனாவில் கொரோனா வைரஸ் அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தியா வந்த போது கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • இதுபோல் சீனாவில் இருந்து பாட்னா திரும்பிய பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக கூறி அவரை பாட்னா மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.  

சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்  கடுமையான சுவாச பிரச்னையால் உயிரிழக்கின்றனர்.

இந்த கொடூரமான வைரஸ் சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்து ஒரு விலங்கு மூலமாக பரவியதாக கூறப்படுகிறது.இதையெடுத்து வுகான் நகரில் இந்தியாவை சார்ந்த மாணவர்கள் மற்றும் வேலைக்காக சென்றவர்கள் என 250 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

அனுமதி கிடைத்தால் தனி விமானம் ஏற்பாடு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வுகான் நகரில் இருந்து இந்தியா வந்த 11 பேரில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் இல்லை  என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதில் 6 பேருக்கு கேரளாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் சீனாவில் மருத்துவ படித்து வந்து உள்ளார். அவர் இந்தியா வந்த போது கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராகு சர்மா கூறினார்.

மேலும் அந்த மாணவனின் இரத்த மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைரசாலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கு இருந்து முடிவுகள் வந்த பின்னர் தான் கொரோனா வைரஸால் அந்த மாணவன் பாதிக்கப்பட்டு இருக்கானா..? என கூறமுடியும் என்று அவர்  கூறினார்.

இதுபோல் சீனாவில் இருந்து பாட்னா திரும்பிய பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக கூறி அவரை பாட்னா மருத்துவமனையில் அனுமதித்து  தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த  கொரோனா வைரஸ் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி உள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் காய்ச்சலால் 80 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 1,500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு  உள்ளனர்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube