புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் உடல் தூக்கி எறியப்பட்ட கொடூரம்!

புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் உடல் தூக்கி எறியப்பட்ட

By leena | Published: Jun 06, 2020 10:45 AM

புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் உடல் தூக்கி எறியப்பட்ட கொடூரம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் ஆயிரம் விலக்கு பகுதியை சேர்ந்த ஒருவர், புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது, உடல்நிலை பாதிக்கபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து, அவருக்கு கொரோன பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவரது உடலை போலீசார், வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சவக்குழியில்  வீசி, அவரது உடலை உள்ளே தள்ளியுள்ளனர். 

இவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்களோ, நண்பர்களோ யாரும் வரவில்லை என கூறப்படுகிற நிலையில், இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Step2: Place in ads Display sections

unicc