BREAKING:கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது -அரசு மீண்டும் விளக்கம் .!

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என அரசு மீண்டும் விளக்கம் தந்துள்ளது. சமூக வலைதளங்களில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பரவும் என பல வதந்தி பரவும் நிலையில் தமிழக கால்நடைத்துறை இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது.

முட்டை கோழி இறைச்சி உண்பதால் கூறுவன பரவாது .கோழி , முட்டை குறித்து மக்களிடம் தவறான செய்தி சமூக ஊடகங்கள் மூலம் பரவுகிறது. இதுபோன்ற தவறான வழி நடத்தும் வதந்திகள் மூலம் நமது புரதத் தேவையில்  இழப்பு ஏற்படுகிறது. வதந்திகள் மூலம் கோழி வளர்ப்பு தொழில் நலிவடைந்து பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

மிகவும் மலிதான புரத உணவான  முட்டை, கோழி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. எனவே  தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை , கோழி இறைச்சியை  சாப்பிடலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

author avatar
murugan