கொடூரன் கொரோனாவால் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழப்பு.!

  • இதுவரை கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்து உள்ளது.
  • பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். சீனாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தது இதுவே முதல் உயிரிழப்பாகும்.

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 20 நாடு கொரோனா வைரஸ்:

சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பிய போது கொரோனா வைரஸ் ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, தைவான், ஆஸ்திரேலியா, பிரான்சு மற்றும் இந்தியா போன்ற 20 நாடுகளுக்கு பரவி உள்ளது.

முதல் உயிரிழப்பு:

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதுவரை சீனாவில் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளனர். ஆனால் முதல் முறையாக சீனாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தது இதுவே முதல் உயிரிழப்பாகும்.இதனால் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்து உள்ளது.

சீனாவில்  கிளைகளை மூடிய ஆப்பிள் நிறுவனம்:

சீனாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின அலுவலகங்கள், தொடர்பு மையங்கள், ஸ்டோர்ஸ் ஆகியவற்றை மூட அந்நிறுவனம் முடிவு செய்து உள்ளது.வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி வரை தங்கள் நிறுவனத்தின் மையங்கள், ஸ்டோர்ஸ் மூடப்படும் என ஆப்பிள் நிறுவனம்  அறிவித்துள்ளது.

சார்ஸை மிஞ்சிய கொரோனா:

உலகமெங்கும் கடந்த 2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் பரவியது.இந்த வைரஸ் மொத்தமாக 24 நாடுகளில் பரவி 750-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.இந்த சார்ஸ் வைரஸ் 8 மாதங்களாக 8,100 பேரை மட்டுமே தாக்கியது. ஆனால் தற்போது பரவி உள்ள கொரோனா வைரசால் சீனாவில் மட்டும் 304 பேர் இறந்து உள்ளனர். மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாக்கி உள்ளது.

author avatar
Dinasuvadu desk