இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 694 ஆக உயர்வு.! உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 649 லிருந்து 694 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்

By Fahad | Published: Apr 02 2020 11:44 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 649 லிருந்து 694 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 லிருந்து 16 ஆக உயர்ந்துள்ளது. இந்தியர்கள் 647 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என 694 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா வைரஸிலிருந்து 45 பேர் குணமடைந்துள்ளார்கள் என தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 118 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குஜராத்தில் 3, மகாராஷ்டிரா 3, கர்நாடகா 2, பீகார், டெல்லி, இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.