கொரோனா தலைதூக்கும் மாநில முதல்வர்களோடு இன்று ஆலோசனை

இந்தியாவில் வைரஸ் அதிகம் பரவிய மாநில முதல்வர்களின் தடுப்பு நடவடிக்கை மற்றும் தீவிரமாக கட்டுப்படுத்துவது குறித்து இன்று  பிரதமர் மோடி கான்பரன்சிங் மூலாமக ஆலோசனை  நடத்துகிறார்.

உலகளவில் 9 லட்சத்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கும் கொரோனா  வைரஸ் தொற்றால் இதுவரை 47 ஆயிரம் பேரை காவு வாங்கி வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரிக்க துவங்கி உள்ள நிலையில் 1834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 457 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி கொண்டே செல்கிறது.இந்நிலையில் இத்தொற்று அதிகம் பரவியுள்ள மாநில முதல்வர்களிடம் இன்று தடுப்பு நடவடிக்கை மற்றும் இருப்பில் உள்ள அத்தியாவசிய மருந்துகள்,மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து முதல்வர்களிடம் கேட்டறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் டெல்லியில் நடந்த மதம் சார்ந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொண்டவர்களை கண்டறியும் பணிகளை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

author avatar
kavitha