அமெரிக்காவை உலுக்கி வரும் கொரோனா.! நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.!

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை.  

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்க துவங்கியுள்ளது. இந்த வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் இதுவரை, இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

உலக அளவில், கொரோனா வைரஸினால், 35,66,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை 2,48,285 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால், அதிகாமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும், அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.  அங்கு இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டாலும், கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வந்தபாடில்லை. 

அந்த வகையில் அமெரிக்காவில், இதுவரை 11,88,122 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 68,598 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த வைரஸ் நோயால், 1,154 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.