டெல்லியில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து

By murugan | Published: Mar 31, 2020 12:27 PM

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக இருந்த நிலையில், நேற்று இரவு வரை 1251 ஐ எட்டியது.

உயிரிழப்பின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா தாக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா, கேரளா உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில்  நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு மதக் கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில்  2000 பேர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட 334 பேரை பரிசோதனை செய்ததில் 24 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

 

Step2: Place in ads Display sections

unicc