அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை.!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99,300 அதிகரித்து உள்ளது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் இந்த வைரஸை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்த வைரஸ் பாதிப்பில், இதுவரை உலக அளவில், 5,500,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 346,719 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் இந்த வைரஸால், இதுவரை 1,686,436 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 99,300 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தால், 617 பேர் உயிரிழந்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.