அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!

அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!

அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை குறி வைத்து தாக்கி வருகிறது. இந்த கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை உலக அளவில், 6,366,197 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 377,437 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், இந்த வைரஸ் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள், வல்லரசு நாடான அமேரிக்கா முதலிடத்தில்  உள்ளது.

இந்நிலையில், இதுவரை அமெரிக்காவில், இந்த வைரஸ் தாக்கத்தால், 1,859,323 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 106,925 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், நேற்று மட்டும் அமெரிக்காவில், 730 பேர் உயிரிழந்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube