கொரோனா வைரஸ் -ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிய கனிமொழி

கொரோனா வைரஸ்  பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. எம்பி  கனிமொழி  ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார். 

எனவே கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ்  பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. எம்பி  கனிமொழி  ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்தாக கனிமொழி தெரிவித்துள்ளார்.