கொரோனா வைரஸ் .! ஒரே நாளில் 15 பேர் பலி.! அச்சத்தில் சீனா மக்கள்.!

  • சீனாவில் நேற்று வரை கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 26 பேர் பலியாகி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேர் இறந்து உள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
  • பலியானோர் அனைவரும் 50 வயதில் இருந்து 87 வயதுக்கு உட்பட்டவர்கள் .இறந்த 15 பேரில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் .

சீனாவில் “கொரனா வைரஸ்” காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் இருந்து பரவியது.தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த  வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது.

இந்த வைரஸ் வூஹான் நகரில் உள்ள வனவிலங்கு சந்தையில் இருந்த ஒரு விலங்குகளிடம் இருந்து பரவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த கொரனா வைரஸ் காய்ச்சல்  சீனா மட்டுமல்லாமல் தாய்லாந்து , சிங்கப்பூர் ,வியட்நாம் ,ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும் பரவி உள்ளது.

Image result for Coronavirus

வூஹான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ரெயில் மற்றும் விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. சீனாவில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க அனைவரும் முகமூடிகளை அணிந்து கொண்டு செல்கின்றனர்.

சீனாவில் நேற்று வரை கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 26 பேர் பலியாகி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேர் இறந்து உள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் அனைவரும் 50 வயதில் இருந்து 87 வயத்திற்கு  உட்பட்டவர்கள். இறந்த 15 பேரில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் இதுவரை இந்த காய்ச்சலுக்கு 1,300 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

author avatar
murugan