கொத்துக்கொத்தாக உயிரைக் கொல்லும் கொரோனா.! ஒரே நாளில் 242 பேர் பலி, 60,015 பேர் பாதிப்பு.! திண்டாடும் சீனா.!

  • சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாலி எண்ணிக்கை அஹிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நேற்று மட்டும் 242 பேர் உயிரிழந்து அதிர்ச்சியை தந்துள்ளது.

சீனாவில் கடந்த ஜனவரி மாதம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை வைரஸான கொரோனா வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. இதனால் சீனாவில்  நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்த வைரசால் நேற்று (புதன்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை 1,310-ஆக உயர்ந்துள்ளது, மற்றும் உலகளவில்  1,357-ஆக அதிகரித்தது. அதில் நேற்று மட்டும் 242 பேர் உயிரிழந்து அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் தாக்கப்பட்டு புதிதாக 14,840 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மொத்தம் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,015-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் வருவதற்கு காரணமாக அங்கிருந்த சந்தைப் பகுதியில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டதால், விலங்குகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது. மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சீனா 12க்கும் மேற்பட்ட நகரங்களுக்குச் செல்லவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும் தடை விதித்து உள்ளது. இதனிடையே, 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்ட கொரோனோ வைரஸ்சின் பெயர், கொவிட்-19 (Covid-19) என மாற்றப்பட்டதாக உலக சுகாதாரத்துறை அறிவித்தது.

அதாவது, கொரோனா என்ற பெயரை பயன்படுத்தி வரும் மக்களும், பல நிறுவனங்களும் இந்த பெயரால் விளைவை சந்தித்ததாகவும், அதற்காக வைரஸின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விதித்தனர். இதுபோன்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்ற உலக சுகாதாரத்துறை வைரஸ்சின் பெயரை மாற்றியுள்ளது. மேலும் வைரஸின் இந்த புதிய பெயர் எதையும் குறிப்பிடாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்