சென்னையில் 15 மண்டலங்களின் கொரோனா நிலவரம்.! ராயபுரத்தில் 3,552 பேருக்கு பாதிப்பு.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி

By balakaliyamoorthy | Published: Jun 06, 2020 10:47 AM

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. சென்னையில் நேற்று மட்டும் 1,116 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 19,826 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், 15 மண்டலங்களில் 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2000-ஐ தாண்டியுள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது. ஆனால், தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதித்தோரின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,202 பேரும், திரு.வி.க. நகரில் 19,58 பேரும், தேனாம்பேட்டையில் 2,245 பேரும், தண்டையார்பேட்டையில் 2,470 பேரும், அண்ணா நகரில் 1,784 பேரும், அடையாறில் 1094 பேரும் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்தில் 996 பேரும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 19,826 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc